என் காதல்
ஷிவ நாமம் என் நாமத்திலும் பெரும் பொருளாய்
உணர்ந்திட உரைத்தது ஒப்பிலா உண்மை
உண்மையில் அன்பென்ற பெருவெள்ளம்
ஊட்றெடுத்தப்பின் உற்றவர் யார் உண்மத்தர் யார்?
தெளிவாய் குழம்பினேன் இங்கு தெளிந்திட
அருள் செய் திருவண்ணாமலையானே..
உகுக்கும் மனக்கண்ணீர் என் ஆன்மாவைக்
கிழித்ததுவோப் பெம்மானே எனைச் சிறையெடுக்க
நீ வருவதெப்போதோ?
சிற்றம்பலத் துள்ளுரை மணாளா சிந்தை
கவர்ந்து உன்பித்தாக்கி யெனைக் காய்ண்ட்ந்ததென்
இறைவா! ஒன்பது வாயிற் குடியிதை உன்
உறைவிடமாய் கொண்டு நீயின்றி
நானில்லையென என்னை என்செயப் பனித்தனையோ?
கள்ளனே! மாயனே!பஞ்சமும் உனதாயின
இந்திரியங்களும் பூதங்களும் உனதாயின
ப்ரணவமும் ப்ராணணும் உனதாயினவே!
உனக்காய் பேதையிவள் சாம்பல் தரித்து
தவமேக் கொண்டேன், மீளாப் பிடியில்
உனைத் துருத்திக் கொண்டுத் திக்கெங்க்கும்
அகன்றேன் நாதனே உங்கழல் நிழலாக்கு
யெனை விரைந்தே !
கண்னிருந்தும் குருடானேன்
மெய்யிலிருந்தும் பொய்யானேன்
சிவனே நீயல்லாதச் சிந்தைக் கொண்டால்
சீவனும் துளிர்க்குதே உன் நாமம் சொன்னாலே..
அஞ்னான குருடாய்
அவதரித்த என்னுள்ளே
மெஞ்னானத் திருவாய்
உருக்கொண்ட உடுக்கையோனே..
எத்துனை முறைப் பாடிலு மிங்கு
ஞனானப்பசித் தீர்ந்திட்டில்லை
பிஞ்ஞகனே!! யோகியே! எனதாவியில்
உறை ஆதிஷிவனே!!
சொல்லும் பொருளும்
உன்னை அடக்குமோ உமாபங்கனே
கண்டதை விண்டிடவோ
நான் கவியானேன் பெரும் மௌனத்திலே!
உன்னருளை இயம்பவும் உளதோ மொழிகள்???

